நேருவின் பல் மருத்துவரின் மகன், பாகிஸ்தானின் 13-வது அதிபரானார்!

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் இம்ரானின் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற ஆரிப் ஆல்வி அந்நாட்டின் 13வது அதிபராக இன்று பதவியேற்றுக் கொண்டார். இவரது தந்தை முன்னாள் இந்திய பிரதமர் நேருவின் பல் மருத்துவர் ஆவார்.
 | 

நேருவின் பல் மருத்துவரின் மகன், பாகிஸ்தானின் 13-வது அதிபரானார்!

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் இம்ரான் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற மருத்துவர் ஆரிப் ஆல்வி அந்நாட்டின் 13வது அதிபராக இன்று பதவியேற்றுக் கொண்டார். 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் ஆரிப் ஆல்வி அதிபராக பதவியேற்றுக்கொண்டார். அந்நாட்டின் உச்ச நிதிமன்ற தலைமை நீதிபதி மியான் சாகிப் நிஸார் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் அதிபர் மம்னூன் உசைன், ராணுவ தளபதி கமார் ஜாவீத் பஜ்வா, அமைச்சர்கள்,  மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

பாகிஸ்தானின் அதிபராக இருந்த மம்னுான் ஹுசைனின் 5 ஆண்டு பதவிக் காலம் வடைநத்தை அடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் சார்பில் பல் மருத்துவரும் கட்சியின் மூத்த தலைவருமான ஆரிப் அல்வி (69) அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.  பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் ஏய்தாஸ் அசான் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் சார்பில் மவுலானா பசல் உர் ரஹ்மான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்கள் 430 பேர் அதிபரை தேர்தெடுக்கும் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். இதில் 212 வாக்குகள் பெற்று ஆரிப் அல்வி வெற்றி பெற்றுள்ளார். வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் புதிய அதிபராக ஆரிப் ஆல்வி பொறுப்பேற்கும் விழா நடைபெற உள்ளது. இவர் பாகிஸ்தான் நாட்டின் 13-வது அதிபராவார். இவரது தந்தை எலாஹி அலவி முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பல் மருத்துவர் ஆவார். 

தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் வலைதளத்தில் ஆரிப் அல்வி குறித்து தொகுத்து வழங்கப்பட்டுள்ள விவரத்தில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP