மன்மோகன் சிங்கிற்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் எச்சரிக்கை!!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள கர்தார்பூர் புனிதத்தல திறப்பு விழாவிற்கு, மன்மோகன் செல்லமாட்டார் என பஞ்சாப் முதலமைச்சர், கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
 | 

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தல திறப்பு விழாவிற்கு பாகிஸ்தானின் அழைப்பை ஏற்று மன்மோகன் செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் அங்கு செல்ல மாட்டார் என்று நினைக்கிறேன் என பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். 

"சீக்கியர்களின் புனித விழாவில் கலந்து கொள்ள, வரும் நவம்பர் 9ஆம் தேதி குடியரசுத்தலைவர் ராம் நாத் பஞ்சாப் வர உள்ள நிலையில், அதே நாளில் பாகிஸ்தான் அரசின் அழைப்பை ஏற்று, அந்நாட்டில் நடைபெறும் கர்தார்பூர் திறப்புவிழாவிற்கு மன்மோகன் சிங் செல்ல மாட்டார்" என திறப்புவிழாவிற்கு வருவதாக கூறியிருந்த மன்மோகன் சிங்கிடம், செல்ல வேண்டாம் என எச்சரிக்கும் வகையில், கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

மன்மோகன் சிங்கிற்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் எச்சரிக்கை!!

கடந்த வாரம், கர்தார்பூர் குறித்து இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கலந்துரையாடிய நிலையில், இந்தியாவிலிருந்து, ஒரு நாளைக்கு, 5,000 முதல் 10,000 மக்கள் கர்தார்பூருக்கு வரலாம் எனவும், அவர்களுக்கு வேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும் எனவும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP