புல்வாமா தாக்குதல்:சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லும் இம்ரான் கான்!

புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க தங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடியை மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.
 | 

புல்வாமா தாக்குதல்:சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லும் இம்ரான் கான்!

புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க தங்களுக்கு வாய்ப்பளியுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடியை  மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான உரிய ஆதாரத்தை இந்தியா அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை் கருத்தை தான், சில தினங்களுக்கு முன்பும், இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம், டோங்க் பகுதியில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி, "புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிராக உண்மையிலேயே நடவடிக்கை எடுத்து, 'பதான் மகன்' போல், முன்பு தமக்கு கொடுத்த வாக்கை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காப்பாற்றுவாரா? இல்லையா? என்று பார்க்கலாம்" எனத் தெரிவித்திருந்தார். 

மேலும், புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதே, அந்த நாட்டு அரசுக்கு போதுமான ஆதாரம் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP