சூடு பட்டும் திருந்தாத பூனையா பாகிஸ்தான்!

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை யூனியன் பிரதேசமாக அறிவித்த மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்ந்து அந்நாட்டில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 | 

அவர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசும் செயல்படுகிறது. இதற்கிடையே, இந்தியாவிற்கு எதிராக சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ட்விட்டரில் தொடர்ந்து கருத்து பதிவிட்டு வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக 'காஷ்மீர் சாலிடாரிட்டி ஹவர்' என்ற பெயரில் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து நூத போராட்டம் நடத்தும் முயற்சி பெரிய அளவில் கை கொடுக்காததால், தற்போது, 'பிக் ஜல்ஸா' என்ற பெயரில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். 

டிவிட்டரை இந்தியாவிக்கு எதிராக பதிவுகள் இடுவதற்கென்றே பயன்படுத்தி வரும் இம்ரான் கான், அவரது பதிவில், காஷ்மீருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்த 'பிக் ஜல்ஸா' வை செப்., 13 அன்று, பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், முஸ்சாபராபாத் ஆகிய பகுதிகளில்  நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரில் வன்முறையை வெடிக்க செய்து, நம் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் எண்ணத்துடன் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசும் செயல்படுவதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP