Logo

கர்தார்பூர் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் வேண்டும் ; வேண்டாம் - குழப்பும் பாகிஸ்தான் !!!

சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் கர்தார்பூர் பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கூறியிருந்த நிலையில், பாஸ்போர்ட் அவசியம் தேவை என்று கூறி இந்தியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார் பாகிஸ்தான் ராணுவ அதிகார் ஜெனரல் ஆசிஃப் கஃபூர்.
 | 

கர்தார்பூர் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் வேண்டும் ; வேண்டாம் - குழப்பும் பாகிஸ்தான் !!!

சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் கர்தார்பூர் பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்த நிலையில், பாஸ்போர்ட் அவசியம் தேவை என்று கூறி இந்தியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார் பாகிஸ்தான் ராணுவ அதிகார் ஜெனரல் ஆசிஃப் கஃபூர்.

சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் கர்தார்பூர் வழித்தடம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தேரா பாபா நானக் கோவிலையும், பாகிஸ்தானின் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கிறது. உலக புகழ்பெற்ற இந்த வழித்தடத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தில், சம்மந்தப்பட்ட  இருநாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும், இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்திட்டதை தொடர்ந்து, இந்த வழித்தடம், வரும் நவம்பர் 9ஆம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதனிடையில், சில நாட்களுக்கு முன்னர், கர்தார்பூர் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான். இவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மகிழ்ச்சியில் இருந்த இந்தியர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும் வகையில், கர்தார்பூர் வரும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் மிக அவசியம் என்ற செய்தியை தற்போது வெளியிட்டுள்ளார் அந்நாட்டு உயர் ராணுவ அதிகாரியான ஜெனரல் ஆசிஃப் கஃபூர்.

இந்நிலையில், இது குறித்த கருத்துக்களை பாகிஸ்தான் பிரதமர் முன் வைக்காததால், கர்தார்பூர் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளது மத்திய அரசு. 

மேலும், சீக்கியர்களின் புனித தலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் 10 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்ற விதியையும், அவர்களுக்கு அளிக்கப்படும் சேவைககளுக்காக 20யுஸ் டாலர்கள் பெறப்படும் என்ற விதியையும் தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்திருந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP