பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் ஒரே நாடு பாகிஸ்தான் - விதிஷா மைத்ரா

பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு அமைதியை விரும்பும் ஒரு தலைவரின் பேச்சாக தெரியவில்லை என விதிஷா மைத்ரா கூறியுள்ளார்.
 | 

பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் ஒரே நாடு பாகிஸ்தான் - விதிஷா மைத்ரா

பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு அமைதியை விரும்பும் ஒரு தலைவரின் பேச்சாக தெரியவில்லை என விதிஷா மைத்ரா கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் விதிஷா மைத்ரா, "பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு இடமளிக்காது என்று கூறும் பிரதமர் இம்ரான் கான், ஐக்கிய நாடுகள், பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுள்ள 130 நபர்களுக்கும் பாகிஸ்தான் தான் வீடு என்பதை மறுக்க இயலுமா ? பயங்கரவாதிகளாக முத்திரைக் குத்தப்பட்ட அல்-கொய்தா அமைப்பிற்கு ஓய்வூதியம் அளிக்கும் ஒரே நாடு பாகிஸ்தானாக தான் இருக்கும்.

மேலும், பாகிஸ்தான்  பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், அணு ஆயுதங்கள் கொண்ட இரண்டு நாடுகளுக்குமிடையே வழக்குகளும், சச்சரவுகளும் தொடர்ந்து நடக்கும் நிலையில், அணு ஆயுத போருக்கே அது வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டார். இவரின் இந்த பேச்சு அமைதியை விரும்பும் ஒரு தலைவரின் பேச்சாக தெரியவில்லை. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற பட்டதை தொடர்ந்து, பல மறைமுக தாக்குதல்களை இந்தியா சந்தித்து கொண்டுதான் இருக்கிறது. எனினும் , இந்திய பிரதமர் மோடியின் பேச்சில் இருந்த அமைதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சில் காண முடியவில்லை" என்று கூறினார்.

நேற்று ஐக்கிய மாநாட்டில் அதன் பிரதிநிதிகள் அனைவர் முன்னிலையிலும் தனது கருத்துக்களை முன் வைத்த பிரதமர் மோடி, "பயங்கரவாதம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திற்கும் தீங்கு விளைவிக்க கூடியதாக அமையும். இதிலிருந்து விடுபட உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 

இந்தியாவிற்காக பேச மட்டும்  நான் இங்கே வரவில்லை, உலக நாடுகள் அனைத்தும், உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அது குறித்து கலந்துரையாடுவதற்காக தான் நான் வந்துள்ளேன். மஹாத்மா காந்தி, கௌதம புத்தா, கணியன் பூங்குன்றனார் போன்ற மிகச் சிறந்த தலைவர்களும், மாபெரும் மனிதர்களும் கூறிச் சென்ற வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றி நடக்கும் நாடான இந்தியா, உலக நாடுகளுடன் புத்தரின் வழியில் செல்ல விரும்புமே தவிர ஒரு நாளும் யுத்த வழியில் செல்ல விரும்பாது" என்று கூறினார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP