பெஷாவர் பள்ளி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பெஷாவர் ராணுவ பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா உடந்தையாக இருந்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
 | 

பெஷாவர் பள்ளி தாக்குதல்: இந்தியா மீது  பாகிஸ்தான் குற்றச்சாட்டு

கடந்த 2014ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள ராணுவ பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இந்தியா உடந்தையாக இருந்ததாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி  ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கான 73-வது பொதுக்குழுக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  தற்போது நடைபெற்று வருகிறது.  அதில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரோஷி உரையாற்றினார்.

அதில் பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள ராணுவ பள்ளியின் மீது கடந்த 2014ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் உட்பட 150 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தார். மேலும் இத்தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் இந்தியாவின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் குரேஷி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமின்றி , தீவிரவாதிகள் தாக்குதலில் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா வருத்தம்கூட தெரிவிக்கவில்லை என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தடைபட்டு போனதற்கு இந்தியா மட்டுமே காரணம் என்றும் அப்போது அவர் குற்றம்சாட்டினார். 

அதையடுத்து குரேஷியின் உரைக்கு தக்க பதிலடி தரும் வகையில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவுக்கான செயலாளர் எனாம் காம்பீர், பெஷாவர் நகரில் பள்ளிக்குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது அந்த நாட்டின் துயரத்தில் இந்தியா பங்கெடுத்தது. மேலும் இந்த துயர சம்பவத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, பயங்கரவாதிகளால் தங்கள் நாடும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக போராடி வருகிறோம் என்றும் பாகிஸ்தான் கூறிவருவதே பெரும் நகைப்புக்கு உரியது என்று ஏனாம் கம்பீர் தெரிவித்தார். ஏனெனில், பயங்கரவாதிகள் என ஐ.நா. சபை அறிவித்துள்ள 132 பேருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் அளித்து வருவதை உலக நாடுகள் கண்டு வருவதாகவும் அப்போது தெரிவித்தார்.

பெஷாவர் பள்ளி தாக்குதல்: இந்தியா மீது  பாகிஸ்தான் குற்றச்சாட்டு

மேலும் தடை செய்யப்பட்ட 22 பயங்கவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளித்து வருவதாகவும், இதை பாகிஸ்தானால் மறுக்க முடியுமா என்றும் ஏனாம் கம்பீர் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் நாடு பயங்கரவாதிகளுக்கு அளித்து வரும் ஆதரவை கைவிட்டால் மட்டுமே இந்தியா அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் என்றும் அப்போது தெரிவித்த அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கம் என்பதை  பிற நாடுகளுக்கு  அறிவித்துக்கொள்வதாக ஏனாம் கம்பீர் அப்போது உறுதிபட அறிவித்தார்.  

நேற்று தினம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கொலைக்குற்றம் புரிந்து வரும் பயங்கரவாதிகளை புகழ்ந்து வரும் பாகிஸ்தான் அரசுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றஉ கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP