பாகிஸ்தானில் விநோதம்: முன்னாள் பிரதமரை சிறைக்கு வழியனுப்ப பேரணி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், ஜாமீன் முடிந்து இன்று மீண்டும் சிறைக்கு திரும்பினார். அவரை கட்சியினர் பேரணியாக சென்று சிறைக்கு வழியனுப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பாகிஸ்தானில் விநோதம்: முன்னாள் பிரதமரை சிறைக்கு வழியனுப்ப பேரணி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஜாமீன் முடிந்து இன்று மீண்டும் சிறைக்கு திரும்பினார். அவரை கட்சியினர் பேரணியாக சென்று சிறைக்கு வழியனுப்பிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அவருக்கு சிறையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், நவாஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, அவருக்கு 6 வாரம் ஜாமீன் வழங்கி கடந்த மார்ச் 26ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் முடிவடைந்து அவர் இன்று மீண்டும் சிறைக்கு செல்லவேண்டிய நிலையில், அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கானோர், நவாஸின் வீட்டில் இருந்து சிறைச் சாலை வரை அவருடன் பேரணியாக சென்றனர். 

இது பாகிஸ்தானில் மாபெரும் பேரணியாக அரங்கேறியுள்ளது. ஜாமீனில் வெளிவந்த ஒருவர் மீண்டும் சிறைக்கு செல்லும்போது, இதுபோன்று ஒரு பேரணி நடைபெறுவது இதுவே முதல்முறை என்று பொது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP