பாகிஸ்தானில் காய்கறி சந்தையில் குண்டுவெடிப்பு - 14 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள காய்கறி சந்தையில் இன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் பலத்த காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
 | 

பாகிஸ்தானில் காய்கறி சந்தையில் குண்டுவெடிப்பு - 14 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள காய்கறி சந்தையில் இன்று காலை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் பலத்த காயமடைந்தனர்.

பலூசிஸ்தான் தலைநகர் குவாட்டாவில் உள்ள இந்தச் சந்தையில், ஹஸாரா சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், சந்தைக்கு அருகில் உள்ள கட்டடங்களும் சேதமடைந்தன. காயமடைந்தவர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர். 

குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பலூசிஸ்தான் மாகாண முதல்வர் ஜாம் கமல் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP