வாஜ்பாய் கூறியதை நினைவுகூர்ந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

2004-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என தன்னிடம் வாஜ்பாய் தெரிவித்ததை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நினைவுகூர்ந்துள்ளார்.
 | 

வாஜ்பாய் கூறியதை நினைவுகூர்ந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

2004-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என தன்னிடம் வாஜ்பாய் தெரிவித்ததை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நினைவு கூர்ந்துள்ளார். 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானிடம் காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண்பதில் அவருக்கு உள்ள நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

அப்போது வாஜ்பாயை தான் சந்தித்த தருணத்தில் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கும் உடன் இருந்ததாகவும்,  இதன் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு எளிதான தீர்வு இருப்பது தெரிய வருவதாகத் தெரிவித்த அவர் பேச்சுவார்த்தை மட்டுமன்றி காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண 2 அல்லது மூன்று விதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP