தீவிரவாதி மஸூத் அஸாருக்கு பாக் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை தரும் பாகிஸ்தான்

இந்தியாவில் பதன்கோட் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்ற மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத் தலைவன் மசூத் அஸார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

தீவிரவாதி மஸூத் அஸாருக்கு பாக் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை தரும் பாகிஸ்தான்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பதன்கோட்  நகரில் அமைந்துள்ள விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்ற மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத்அசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களில் முக்கியமான ஒன்று ஜெய்ஷ்-இ- முகம்மது. இதன் தலைவர் மசூத் அசார் (50). 
தற்போது இவர் முதுகு தண்டுவடம் மற்றும் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் தங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மசூத் அசார் உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக கிடப்பதை இந்திய உளவுத்துறை உறுதி செய்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளால் இதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இவரை பாகிஸ்தானில் பொது இடங்களில் நீண்ட நாட்களாக எங்கும் காண இயலவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இவரது சகோதரர்கள் ரயூப் அஸ்கர், ஆதார் இப்ராகீம் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரி மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்களுக்கு இந்த  அமைப்பு காரணமாக உள்ளது.

இந்திய விமானம் கடத்தல்...

மசூத்அசார் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தீவிரவாதிகள் ஏர் இந்தியா விமானத்தை நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவிலிருந்து 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காந்தகாருக்கு கடத்திச் சென்று அதில் இருந்த 814 பயணிகளை பிணைய கைதிகளாக சிறை பிடித்தனர். விமானத்திலிருந்த பயணிகளை விடுவிப்பதற்கு மஸூத் அசாரை விடுதலை செய்ய வேண்டுமென்று ஜெய்ஸ் - இ- முகம்மது தீவிரவாத இயக்கம், இந்திய அரசுக்கு நிபந்தனை விதித்தது. அந்த காலகட்டத்தில் இந்திய ஊடகங்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஒர் அதிருப்தி மனப்பான்மையை தோற்றுவித்தன. அந்நிலையில் வேறு வழியின்றி அப்போது பிரதமராக பதவிவகித்து வந்த அடல் பிஹாரி வாஜ்பாய், தீவிரவாதி மஸூத் அஸாரை விடுதலை செய்துவிட்டு, விமான பயணிகளை மீட்டு வருமாறு அப்போது வெளியுறத்துரை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த சிங்கை, ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்.  மஸூத் அஸாரை தேடப்படும் சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல், மற்றும் 2016-ம் ஆண்டு நடந்த பதன்கோட் விமான படை தளம் மீதான தாக்குதல்களில் இவருக்கு நெருங்கிய தொடர்புள்ளதை இந்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP