பாகிஸ்தான் : நவம்பர் 29 அன்று அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ள மாணவர்கள்!!

பாகிஸ்தான் : கட்டண உயர்வு, ஊழல்கள் போன்ற விவகாரங்களுக்கு பாகிஸ்தான் அரசு தான் காரணம் என்று கூறி, இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக வரும் 29ஆம் தேதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 | 

கல்லூரிகளில் சேருவதற்கு முன்னர் ஒவ்வொரு மாணவரிடமும் அரசியலில் ஈடுபட கூடாது, கல்லூரிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட கூடாது என்பது போன்ற சில கட்டுபாடுகளில் கையெழுத்து வாங்கியதற்கு பின்னரே கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவதும், கல்லூரி கட்டணம் மிக அதிகமாக பெறுவதும் தான் இந்த போராட்டத்திற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து லாகூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபோவதாகவும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP