பாகிஸ்தான்: ரிக்ஷா - லாரி நேருக்கு நேர் மோதல்; 7 குழந்தைகள் பலி!

பாகிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் நரோவால் என்ற இடத்தில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த ரிக்ஷா ஒன்று எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில், ரிக்ஷா கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 குழந்தைகள், ஓட்டுநர் என 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
 | 

தகவலறிந்து பின்னர் போலீசார் மற்றும் மீட்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆட்டோவில் மொத்தமாக 15 குழந்தைகள் பயணித்துள்ளனர். 

இவர்கள் அனைவருமே 7 வயது முதல் 14 வயது உள்ள குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP