தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உறுதி

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது.
 | 

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவிகளை அமெரிக்கா குறைத்தும் வருகிறது. சமீபத்தில் புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சர்வதேச அரங்கில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் சென்றுள்ளார். அதே நேரத்தில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த தொலைபேசி அழைப்பில், தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம், என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதாக போல்ட்டன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய ட்வீட்டில், "பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரைஷியிடம் பேசினேன். ஜெய்ஷ்-ஈ-முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவோம் என்றும், அவர் என்னிடம் உறுதி அளித்துள்ளார்" என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP