எல்லையை நோக்கி படைகளை நகர்த்தும் பாகிஸ்தான்!

இந்திய ராணுவத்தின் பாலகோட் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தனது படைகளை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
 | 

எல்லையை நோக்கி படைகளை நகர்த்தும் பாகிஸ்தான்!

இந்திய ராணுவத்தின் பாலகோட் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தனது படைகளை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.  

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் இந்திய விமானப்படை ரகசிய தாக்குதல் நடத்தியது. இதில், ஜெய்ஷ் ஈ முஹம்மது தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இந்திய ராணுவ கட்டிடங்கள் மீது குண்டு வீச வந்த பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர்விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில், இந்திய விமானப்படையின் MiG 21 போர்விமானம் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானப்படை விங் கமேண்டர் அபிநந்தனை, அந்நாடு  விடுவித்து, சமாதானத்தை விரும்புவதாக தெரிவித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம், எல்லை கட்டுப்பாட்டுக்கு கோட்டில், தனது படைகளை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில் பாக் ராணுவத்தின் படைகள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர். சியல்கோட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராணுவ படைகள், ஆயுதங்கள் மற்றும் உதவி பொருட்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இதனால், பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP