பாகிஸ்தான் - இந்தியா பேச்சுவார்த்தை; மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா மறுப்பு

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக கூறி, மத்தியஸ்தம் செய்ய அமெரிக்காவை அழைத்த பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
 | 

பாகிஸ்தான் - இந்தியா பேச்சுவார்த்தை; மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா மறுப்பு

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக கூறி, மத்தியஸ்தம் செய்ய அமெரிக்காவை அழைத்த பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

புதிய பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான், இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் தெரிவித்தார். இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்களும் நியூயார்க்கில் சந்தித்து பேச வேண்டும் என அவர் இந்திய அரசை வலியுறுத்தினார். இதை முதலில் இந்திய அரசு ஒப்புக்கொண்டாலும், எல்லையில் நடைபெற்று வரும் தாக்குதல்களை காரணம் காட்டி, பின்னர் சந்திப்பை ரத்து செய்துவிட்டது. 

இந்நிலையில், அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் , இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை மத்தியஸ்தம் செய்ய அமெரிக்காவை தான் அழைத்ததாகவும், ஆனால், அமெரிக்கா மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். "அமெரிக்காவை மத்தியஸ்தம் செய்ய அழைத்தோம். ஏனென்றால், இரு நாடுகளும் தாங்களாகவே பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை.இரு நாடுகளும் பேசாமல் இருப்பது குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது" என்றார் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி. 

மேலும், "நீங்கள் பேச்சுவார்த்தையை நடத்தி வைப்பீர்களா என கேட்டதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். நாங்களாவே பேச வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால், அது நடப்பதாக இல்லை" என்றும் அவர் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP