காஷ்மீர் விவகாரத்துக்கு பாகிஸ்தானில் கண்டன தீர்மானம்

காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படைகளால் பொதுமக்களுக்கு எதிராக வன்முறைகள் அரங்கேற்றப்படுவதாக கூறி நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த கண்டன தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
 | 

காஷ்மீர் விவகாரத்துக்கு பாகிஸ்தானில் கண்டன தீர்மானம்

காஷ்மீரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைகளை இந்திய பாதுகாப்பு படை அரங்கேற்றுவதாக கூறி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கண்டனத்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படைகளால் பொதுமக்களுக்கு எதிராக வன்முறைகள் அரங்கேற்றப்படுவதாக கூறி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நேற்று கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் உள்ள காஷ்மீர் மற்றும் கில்ஜித்- பல்ஜிஸ்தான் விவகாரங்கள் துறை அமைச்சர் அலி அமின் கன்ந்தபூர் இந்த தீர்மானத்தை நாடாளுமன்ற சபையில் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தில்,  காஷ்மீர் பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின்படி தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

பாகிஸ்தானின் ஊடுருவலும் பாசாங்கு தீர்மானமும் 

இதனிடையே காஷ்மீரில் பயிற்சி பெற்ற 4 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். குறிபார்த்து சுடுவதில் பயிற்சி பெற்ற இந்த பயங்கரவாதிகள் கடந்த செப்டம்பர் மாதம் ஊடுருவியதாகவும், புல்வாமா மாவட்டத்தில் உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன் அவர்கள் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மிண்டூரா முகாம் வளாகத்தில் நின்று குடும்பத்தாரோடு செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதி ஒருவன் சுட்டதில் விஜயகுமார் என்னும் வீரர் கொல்லப்பட்டார்.  இதேபோல லுராகம் முகாமில் ராணுவ வீரர்களை குறிபார்த்து பயங்கரவாதி ஒருவன் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர். ஒரு வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதலை நடத்தியது. 

இந்த நிலையில் ஊடுருவலை தடுக்க இந்திய வீரர்கள் நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள அவர்களின் ராணுவ தலைமையகம் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கிராம மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தவில்லை எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து ஸ்ரீநகர் பகுதியில் உள்ள பாந்தா சவுக் பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் வழக்கம்போல் ரோந்து சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் ராணுவ வீரர்களை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் நமது ராணுவ வீரர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். 

பாகிஸ்தான் தரப்பிலிருந்து பயங்கரவாதிகளும் அவர்களுக்கு துணையாக அந்நாட்டு ராணுவமும் செயல்படும் நிலையில், பாசாங்கிற்காக ஒரு கண்டன தீர்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் கொண்டுவந்துள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP