அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: தலிபான் திட்டவட்டம்

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு வந்துள்ள அமெரிக்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் தீவிரவாதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 | 

கடந்த 17 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் ஏற்பாடு செய்யவுள்ளதாக பாகிஸ்தான் கடந்த ஆண்டு கூறியிருந்தது. அமெரிக்க அரசின் சிறப்பு பிரதிநிதி, சல்மே களீல்ஸாத் இரு தினங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு வந்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவர் சந்தித்து பேசினார் . 

இந்நிலையில், ஆப்கானில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசு பிரதிநிதியுடன் தலிபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்த செய்தியை ஆப்கான் தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP