கர்தார்பூர் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் தேவையில்லை - இம்ரான் கான்!!

உலக புகழ்பெற்ற சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் கர்தார்பூர் பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம் வேண்டும் ; 10 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்ய வேண்டும் என்ற இரு பெரும் விதிகளை தள்ளுபடி செய்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
 | 

கர்தார்பூர் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் தேவையில்லை - இம்ரான் கான்!!

உலக புகழ்பெற்ற சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் கர்தார்பூர் பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம் வேண்டும் ; 10 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்ய வேண்டும் என்ற இரு பெரும் விதிகளை தள்ளுபடி செய்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தேரா பாபா நானக் கோவிலையும், பாகிஸ்தானின் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வழித்தடமான கர்தார்பூர், சீக்கியர்களின் புனித தலமாக கருதப்பட்டு வருகிறது.

இத்தகைய உலக புகழ்பெற்ற வழித்தடத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் கையெழுத்திட்டதை தொடர்ந்து, வரும் நவம்பர் 9 அன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில், ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போது, கர்தார்பூர் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் மிக அவசியம் என்று குறிப்பிட்டிருந்த பாகிஸ்தான், தற்போது அந்த விதியினை தள்ளுபடி செய்துள்ளது. இதை தொடர்ந்து, சீக்கியர்களின் புனித தலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் 10 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்ற விதியையும் தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

 

 

மேலும், கர்தார்பூரின் வழித்தடம் திறக்கப்படும் தினத்தன்று, அங்கு வரும் இந்தியர்களுக்கு "ஜிஸ்யா" எனப்படும் முஸ்லிம் இல்லாத பிற மதத்தை பின்பற்றும் மக்களிடம், அவர்களுக்கு அளிக்கப்படும் சேவைககளுக்காக பெறப்படும் வரியான 20யுஸ் டாலர்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பு விடுத்துள்ளார் இம்ரான் கான்.

பாகிஸ்தான் பிரதமரின் இந்த அறிவிப்புகள், பாகிஸ்தானில் அமைந்திருக்கும் சீக்கியர்களின் புனித தலத்திற்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதனிடையில், "ஜிஸ்யா" எனப்படும் வரியை முழுவதுமாக ரத்து செய்யும்படி, இந்தியா பாகிஸ்தானிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP