தேசத்துரோக வழக்கில் முஷாரஃப்புக்கு சம்மன்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், உடல்நிலை துபாயில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அவர் மீதுள்ள தேசத் துரோக வழக்கில் ஆஜராக வேண்டும் என பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் சம்மன் விடுத்துள்ளது.
 | 

தேசத்துரோக வழக்கில் முஷாரஃப்புக்கு சம்மன்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், உடல்நிலை சரியில்லாமல் துபாயில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அவர் மீதுள்ள தேசத் துரோக வழக்கில் ஆஜராக வேண்டும் என பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் சம்மன் விடுத்துள்ளது.

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், கடந்த 2014ம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டார். அதன் பின்னர், உடல்நிலை சரியில்லை என்று கூறி, சிகிச்சைக்காக அவர் துபாய் சென்றார். இந்த நிலையில், அவர் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் மே மாதம் 13ம் தேதி ஆஜராக விரும்புவதாக அவரது தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், "அவரால் மே 13ம் தேதி வர முடியும் என்றால், மே 2ம் தேதியும் வர முடியும். இல்லையென்றால் நீதிமன்றம் அதற்கு ஏற்றாற்போல அவர் மீது நடவடிக்கை எடுக்கும்" என கூறி, அவருக்கு நீதிபதிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP