பஞ்சாப் மாகாணம் பஹவல்பூரில் செயல்படுவது 'மதரஸா' தான்: பாகிஸ்தான் திடீர் 'பல்டி'

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பஹவல்பூரில் செயல்படும் ஜெய்ஷ் - இ- முகம்மது அமைப்பின் தலைமையகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக நேற்று கூறியிருந்த நிலையில், இன்று, அங்கு செயல்பட்டு வருவது மதரஸா தான் என்று பாகிஸ்தான் திடீர் 'பல்டி' அடித்துள்ளது.
 | 

பஞ்சாப் மாகாணம் பஹவல்பூரில் செயல்படுவது 'மதரஸா' தான்: பாகிஸ்தான் திடீர் 'பல்டி'

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பஹவல்பூரில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் - இ- முகம்மது அமைப்பின் தலைமையகத்தை, ராணுவத்தின் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மட்டுமின்றி, அதற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அவ்வாறு செய்ததாக நேற்று கூறியிருந்த நிலையில், இன்று அந்த இடத்தில் செயல்படுவது மதரஸா தான் என்று பாகிஸ்தான் திடீர் 'பல்டி' அடித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் துணை ராணுவப்படை வீரர்கள் பயணித்த பேருந்து மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ் -இ- முகம்மது தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றனர். இந்த அமைப்புக்கு பாகிஸ்தானில் இருந்து தான் நிதி வழங்கப்பட்டு வருகிறது என்று இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. 

பாகிஸ்தான் இந்த தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளிப்பதை எதிர்த்து, பாகிஸ்தானின் வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்வது,  பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி விதிப்பது, ராவி, சட்லெஜ் மற்றும் பியாஸ் நதிகளின் நீரை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட  பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசுஎடுத்து வருகிறது.

பஞ்சாப் மாகாணம் பஹவல்பூரில் செயல்படுவது 'மதரஸா' தான்: பாகிஸ்தான் திடீர் 'பல்டி'

இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. ஐ.நா சபை, மனித உரிமைகள் ஆணையம் போன்ற உலக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மற்றும் உறுப்பினர் நாடுகளுடன் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டது. 

மேலும், தீவிரவாதத்தை தடுக்கும் சர்வதேச அமைப்பு, பாகிஸ்தானை கிரே பட்டியலில் இருந்து விளக்க முடியாது என்றும், தொடர்ந்து தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வந்தால், பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பஞ்சாப் மாகாணம் பஹவல்பூரில் செயல்படுவது 'மதரஸா' தான்: பாகிஸ்தான் திடீர் 'பல்டி'

இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடந்த தேசிய பாதுாப்புக்குழுக் கூட்டத்தில், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத் -உத்-தாவா மற்றும் பலாஹி இன்சானியாத் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூரில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் - இ- முகம்மது அமைப்பின் தலைமையகத்தை பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுள்ளதாகவும், அந்த இடத்திற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கிலேயே இவ்வாறு செயல்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதையடுத்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே இணையத்தில் விட்ட அறிவிப்பை பாகிஸ்தான் அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. பஹவல்பூரில் அந்த இடத்தில் இருப்பது மதரஸா தான் என்றும் அதில், 500கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும்  கூறி, நேற்று கூறியிருந்ததற்கு மாறாக இன்று புதிய கருத்தைக் கூறி பல்யடித்துள்ளது பாகிஸ்தான் அரசு.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP