10 வயது சிறுமியை திருமணம் செய்த கயவன்- பாகிஸ்தானில் நடந்த கொடூரம்

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஷிகார்பூர் நகரில் வசித்து வரும் முகமது சோமர் என்ற 40 வயதான நபருக்கும் 10 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது.
 | 

10 வயது சிறுமியை திருமணம் செய்த கயவன்- பாகிஸ்தானில் நடந்த கொடூரம்

பாகிஸ்தானில் 10 வயது சிறுமியை திருமணம் செய்த 40 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஷிகார்பூர் நகரில் வசித்து வரும் முகமது சோமர் என்ற 40 வயதான  நபருக்கும் 10 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது.

ஆனால்  திருமண மேடையில் அமர்ந்திருந்த சிறுமி அழுது கொண்டே இருந்துள்ளார். இதை பார்த்த அந்த திருமணத்திற்கு வந்திருந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் தந்துள்ளார்.

ஆனால் போலீசார் வருவதற்குள் திருமணம் நடந்து முடிந்து விட்டது. இருப்பினும் முகமது சோமரை கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் முகமது சோமர் சிறுமியின் தந்தையிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்து திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் தந்தை கைது செய்த போலீசார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த இடைத்தரகரை
வலை வீசி தேடி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP