காஷ்மீரிகளுக்கு சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு: பாகிஸ்தான் புதிய அதிபர் பேச்சு

காஷ்மீர் மக்களுக்கு சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக தனது முதல் நாடாளுமன்ற உரையில் பாகிஸ்தானின் புதிய அதிபராக பதவியேற்ற ஆரிப் அல்வி குறிப்பிட்டு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

காஷ்மீரிகளுக்கு சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு: பாகிஸ்தான் புதிய அதிபர் பேச்சு

காஷ்மீர் மக்களுக்கு சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக தனது முதல் நாடாளுமன்ற உரையில் பாகிஸ்தானின் புதிய அதிபராக பதவியேற்ற ஆரிப் அல்வி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் புதிய அதிபராக சமீபத்தில் பதவியேற்ற ஆரிப் அல்வி அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்று தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், ''இந்தியாவுடன் அமைதியான உறவைப் பேணவே பாகிஸ்தான் விரும்புகிறது. இது இருதரப்பும் விரும்பும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். 

காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் எப்போதுமே துணை நிற்கும். காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அதாவது சுயமாக முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் உண்டு. காஷ்மீர் பிரச்னைக்கு ஐ.நா.வின் வழிகாட்டுதல்களின் படி அமைதியான தீர்வுகாண வேண்டும். மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்வதால் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னைகளைத் தீர்த்து, நல்லுறவை மேம்படுத்த வேண்டியது அவசியம். அண்டை நாடுகளுடன் மட்டுமின்றி அனைத்து இஸ்லாமிய நாடுகளுடன் பாகிஸ்தான் நல்லுறவை பேணவே விரும்புகிறது. தற்போது அமைந்துள்ள ஆட்சியானது, ஊழலை வீழ்த்தி நடைபோடுகிறது. தமது சிக்கன நடவடிக்கையின் மூலம் மக்களின் மனங்களையும் கவர்ந்துள்ளது" என்றார்.  

ஆட்சியைப் பற்றி புதிய அதிபர் பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, நவாஸ் ஷெரீப் கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினர். 

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள நிலையில், பாகிஸ்தான் புதிய அதிபர் தனது முதல் உரையில் காஷ்மீர் மக்களுக்கு சுயமாக முடிவெடுக்கும் உரிமை இருப்பதாக பேசி இருப்பது சர்ச்சையான கருத்தாக பார்க்கப்படுகிறது.

Newstm.in 

தொடர்புடையவை: நேருவின் பல் மருத்துவரின் மகன், பாகிஸ்தானின் 13-வது அதிபரானார்!  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP