புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இந்தியர்கள் போராட்டம்!

புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்டனர்.
 | 

புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இந்தியர்கள் போராட்டம்!

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வர்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்டனர். 

புல்வாமா பகுதியில், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் நமது இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் 38 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புல்வாமா கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த இயக்கத்தைச் சேர்ந்த ஆதில் அஹமது என்பவன் தான் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளான். இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் தான் ஆதரவு அளிக்கிறது என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. 

இந்த தாக்குதல் சம்பவம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு நேற்று ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். தேசியக்கொடியை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்று பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். 

மேலும், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அந்நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பிரிட்டன் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP