சொந்த பிரச்சினைகளுக்கு பாகிஸ்தான் மீது பழிபோடுவதை இந்தியா நிறுத்த வேண்டும்

இந்தியா தனது சொந்த பிரச்சினைகளுக்காக பாகிஸ்தான் மீது பழி போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
 | 

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குர்ஷித், காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர்களுள் ஒருவரான மிர்வைஸ் உமர் ஃபரூக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமீபத்தில் பேசியுள்ளார். அப்போது அவர், காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச நாடுகளின் கவனத்தை கொண்டு வர பாகிஸ்தான் உதவும் என்று கூறியதாகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு அவரை அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவருடன் தான் பேசியதில் எந்த தவறும் கிடையாது, என்று குர்ஷித் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் மீது இந்தியா பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து சர்வதேச நாடுகள் மத்தியில் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை எடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், ஆட்சியமைக்கும் இந்திய அரசுடன் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP