புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை இந்தியா அளிக்க வேண்டும்: இம்ரான் கான்

புல்வாமா தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்களை இந்தியா அளித்தால், இத்தாக்குதலுக்கு காரணமானோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
 | 

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை இந்தியா அளிக்க வேண்டும்: இம்ரான் கான்

புல்வாமா தாக்குதலில்  பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை இந்தியா அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம்,  புல்வாமாவில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு  ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த அமைப்பு பாகிஸ்தான் ராணுவத்தின் செல்லப்பிள்ளை என்பதால், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இத்தாக்குதலில் நிச்சயம் தொடர்பு இருக்கிறது என இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறது.

மேலும், ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், இந்திய விமானப் படை இரு தினங்களுக்கு முன் போர் ஒத்திகை பயிற்சியையும் மேற்கொண்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையையும் பாதுகாப்புப் படை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு வானொலியில் இன்று மதியம் 1 மணியளவில் உரையாற்றினார்.அப்போது புல்வாமா தாக்குதல் குறித்து அவர் பேசியது:

பாகிஸ்தான் மண்ணில் இருந்து யாரும் தீவிரவாதத்தை பரப்பக்கூடாது என்பதுதான் எங்களின் விருப்பம். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. 

இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் இருந்தால், அவற்றை இந்தியா பாகிஸ்தானுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க முடியும். மேலும், இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இயலும்.

புல்வாமா தாக்குதலை காரணமாக வைத்து, பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், நாங்களும் திரும்ப தாக்குதல் நடத்துவோம். பேச்சுவார்த்தையின் மூலமே இப்பிரச்னை தீ்ர்க்கப்பட வேண்டும் என்று இம்ரான் கான் கூறினார்.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP