கர்தார்பூர் விஷயத்தை இந்தியா அரசியலாக்குகிறது : இம்ரான் கான்

பாகிஸ்தானில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனித ஸ்தலங்களுள் ஒன்றான கர்தார்பூர் எல்லை திறந்துவிடப்பட்ட நிகழ்வுக்கு இந்தியா அரசியல் சாயம் பூசிவிட்டதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருத்தம் தெரிவித்தார்.
 | 

கர்தார்பூர் விஷயத்தை இந்தியா அரசியலாக்குகிறது : இம்ரான் கான்

பாகிஸ்தானில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனித ஸ்தலமான கர்தார்பூர் எல்லை திறந்துவிடப்பட்ட நிகழ்வுக்கு இந்தியா அரசியல் சாயம் பூசிவிட்டதாக, பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான் வருத்தம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர், இஸ்லாமாபாதில் இன்று (வியாழக்கிழமை) மேலும் கூறியதாவது:
எனது பதவியேற்பு விழாவில்  பங்கேற்ற, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து, கர்தார்பூர் விவகாரம் குறித்து என்னுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து இதுகுறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, எங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளப்படி, கர்தார்பூர் எல்லை தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது.

ஆனால், சில அரசியல் ஆதாயங்களுக்காகவே  நாங்கள் கர்தார்பூர் எல்லையை நாங்கள் திறந்து விட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் கூறி வருகின்றன. உண்மையில் இந்தியா தான் இந்த விஷயத்துக்கு அரசியல் சாயம்  பூசி வருகின்றது என இம்ரான் கான் தெரிவித்தார்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தமது வாழ்நாளின் அந்திம காலத்தை கர்தார்பூரில் கழித்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இப்பகுதி பாகிஸ்தான் வசம் சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP