பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் ஓர் நாள் நம் வசமாகும் என இந்திய வெளியுறவுத்துறை கூறிய கருத்துக்கு இம்ரான் எதிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிக்கு சொந்தமானதுதான்:ஓர் அது நம் வசமாகும் எனஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதைற்கு பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 | 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் ஓர் நாள் நம் வசமாகும் என இந்திய வெளியுறவுத்துறை கூறிய கருத்துக்கு இம்ரான் எதிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிக்கு சொந்தமானதுதான்: ஓர் நாள் அது நம் வசமாகும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதற்கு பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றிய நமது நிலைப்பாடு எப்பொழுதுமே தெளிவாக இருந்து வருகிறது.  அந்த பகுதி இந்தியாவிற்குச் சொந்தமானது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் ஓர் நாள் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 

அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வருவதை நிறுத்த வேண்டும். உலக நாடுகள் பலவும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதிநிதியை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், " காஷ்மீர் குறித்த இந்தியாவின் இந்த நிலைபாடு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. காஷ்மீர் சர்ச்சையில் இருந்து தப்பிக்க, மற்ற நாடுகளின் பார்வையில் பாகிஸ்தானை குற்றவாளியாக காட்ட இந்தியா முயல்கிறது" எனக் கூறினார். 

இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சனையை பிற நாடுகளின் பார்வைக்கு எடுத்துச் செல்ல முயன்ற பாகிஸ்தானுக்கு, சீனா, யுஏஇ மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் இந்த பிரச்னை உங்கள் இரு நாடுகளுக்கு இடையேயானது. அதை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என பாகிஸ்தானுக்கு அறிவுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP