பாகிஸ்தானில் இடைக்கால பிரதமரால் இம்ரான் பதிவியேற்பு தள்ளிவைப்பு? 

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழா, 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 | 

பாகிஸ்தானில் இடைக்கால பிரதமரால் இம்ரான் பதிவியேற்பு தள்ளிவைப்பு? 

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழா, 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக தெஹ்ரீக் இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் பதவியேற்க உள்ளார்.  இந்த விழா வரும் 11 ஆம் தேதி நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் புதிய பிரதமரின் பதவியேற்பு விழா பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற வேண்டும் என்று இடைக்கால அரசின் பிரதமர் நாஸிருல் முல்க் விரும்புகிறார்.  எனவே, இம்ரானின் பதவியேற்பு விழா தள்ளி வைக்கப்படலாம் என்று பாகிஸ்தான் நாளிதழான டான் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஜூலை 25ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சி அமைக்கும் தேவையான பெருமான்மைக்காக சிறியக் கட்சிகளுடன் இம்ரான் கைக் கோர்த்துள்ளார். 

முன்னதாக, பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி அழைக்கப்படுவார் என பெரிதும் பேசப்பட்டது. ஆனால் அத்தகைய யோசனை இல்லை என பிடிஐ கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. 

அதே போல, முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, இந்தி நடிகர் அமீர் கான் ஆகியோருக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளதாகவும் இவர்கள் விழாவில் கலந்துகொல்வதாகவும் செய்திகள் வெளியானது. அந்த முடிவிலிருந்து இம்ரான் கட்சி பின்வாங்கியது 
குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP