பிரதமர் இல்லம் வேண்டாம்: சிக்கன நடவடிக்கையில் இம்ரான் கான்! 

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற இம்ரான் கான் பிரதமர் இல்லத்தில் தங்க போவதில்லை, 3 படுக்கை அறைகள் உள்ள ராணுவ குடியிருப்பில் தங்குவதாக அறிவித்துள்ளார்.
 | 

பிரதமர் இல்லம் வேண்டாம்: சிக்கன நடவடிக்கையில் இம்ரான் கான்! 

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற இம்ரான் கான் பிரதமர் இல்லத்தில் தங்க போவதில்லை, 3 படுக்கை அறைகள் உள்ள ராணுவ குடியிருப்பில் தங்குவதாக அறிவித்துள்ளார். 

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான் கான் நேற்று அந்நாட்டு மக்களுக்க்காக தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''பிரதமர் இல்லம், கவர்னர் மாளிகைகள் என உள்ளன. அங்கு ஆடம்பரங்கள் தலைவிரித்தாடுகின்றன. தேவைக்கு மிகுதியான வசதிகள் உள்ளன. ஆனால் நமது நாட்டில் மக்களுக்கு நலத்திட்டங்கள் கொண்டுவரக் கூட பணம் இல்லை. ஆனால் ஆட்சி புரிபவர்களுக்கு தாராளமாக தேவைக்கு அதிகமாக பணம் விரையமாகிறது. 

இந்த நிலை நீடித்தால் மக்கள் எப்படி வாழமுடியும். பிரதமர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு ரூ.65 கோடி செலவிடப்பட்டுள்ளது. சபாநாயகரின் செலவுக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது போன்ற செலவுகள் குறைக்க திட்டம் போடப்படும். 

அதனால் நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. அதற்கு பதில் இஸ்லாமாபாத்தில் உள்ள 3 படுக்கை அறை கொண்ட ராணுவ செயலாளர் வீட்டில் தங்க இருக்கிறேன். எனக்கு பான்சுலாவில் உள்ள வீட்டில் தான் தங்க நினைத்தேன். ஆனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதுகாப்புத்துறை தெரிவிக்கிறது.

எனக்காக 2 கார்களை மட்டும் பயன்படுத்துவேன். அதில் ஒன்று பாதுகாப்புப் படையினருக்கு. பிரதமர் இல்லத்தில் பணியில் உள்ள ஊழியர்களை மட்டுமே என்னுடன் வைத்துக்கொள்ள போகிறேன். மற்ற 31 புல்லட் புரூப் கார்கள் அனைத்தும் ஏலம் விடப்படும். அந்தப் பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். கவர்னர் மாளிகைகள் அனைத்தும் எளிமையாக்கப்படும். பிரதமர் இல்லம் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்படும்.

நாடுமுழுவதும் செய்யப்படும் தேவையற்ற செலவை குறைக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அரசு பணம் மக்கள் நலனுக்காக செலவிடப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்'' என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP