சவுதி விமானத்தில் அமெரிக்கா வந்தடைந்தார் இம்ரான் கான்

செப் 27., அன்று நடக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க பயணம் மேற்கொண்ட இம்ரான் கானை, சௌதி இளவரசர் தனது சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தார்.
 | 

ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தைக் குறித்து பேச உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளதையடுத்து, இந்தியாவின் நிரந்தர தூதரான  சையது அக்பரூதீன், "உலக நாடுகளின் மத்தியில் நம்மை குற்றவாளியாக காட்டும் முயற்சியில் பாகிஸ்தான்  ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானின் தீவிரவாத மிரட்டலுக்கே செவி சாய்க்காத நம்மை, அதன் வெறுக்கத்தக்க பேச்சுகள் எந்த வகையிலும் பாதிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், உலக நாடுகளின் முன்னிலையில் இந்தியாவை ஒரு போதும் பாகிஸ்தானால் குற்றவாளியாக காண்பிக்க இயலாது. பாகிஸ்தான் தரம் தாழ்ந்து செயல்படுகிறது; அதன் இந்த செயல்பாடு இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது. நாம் உயரப் பறந்து கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP