நவாஸ் பயன்படுத்திய எருமைகளையும் ஏலம் விடும் இம்ரான் அரசு!

பாகிஸ்தானில் புல்லட் புகாத ஆடம்பரக் கார்களை தொடர்ந்து நவாஸ் குடும்பத்துக்காக பயன்படுத்தப்பட்ட 8 எருமைகளையும் ஏலத்தில் விட தற்போதைய பிரதமர் இம்ரான் திட்டமிட்டுள்ளார். இவை நவாஸ் ஷெரீப் குடும்பத்தினரின் உணவு பயன்பாட்டுக்காக வளர்க்கப்பட்டவை.
 | 

நவாஸ் பயன்படுத்திய எருமைகளையும் ஏலம் விடும் இம்ரான் அரசு!

பாகிஸ்தானில் புல்லட் புகாத ஆடம்பரக் கார்களை தொடர்ந்து நவாஸ் குடும்பத்துக்காக பயன்படுத்தப்பட்ட  8 எருமைகளையும் ஏலத்தில் விட தற்போதைய பிரதமர் இம்ரான் திட்டமிட்டுள்ளார். 

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.  பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவி ஏற்ற இம்ரான் கான் இந்தச் சூழல்களை கருத்தில் கொண்டு அரசுத் தரப்பில் ஆடம்பர செலவுகளை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசு அதிகாரிகள் பயன்படுத்திய ஆடம்பர கார்கள், புல்லட் புகாத கார்கள் ஏலம் விடுவது, அரசு உயர் அதிகாரிகளின் உயர்தர விமான பயணங்களுக்கு தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் பிரதமர் இல்லத்தில் இருக்கும் 8 எருமைகளை ஏலத்தில் விட இம்ரான் திட்டமிட்டுள்ளார். இந்த எருமைகள் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினரின் உணவு பயன்பாட்டுக்காக வளர்க்கப்பட்டவை. 

இது குறித்துப் பேசிய தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, ''முதல் முறையில் 70 கார்களை நல்ல விலைக்கு வெற்றிகரமாக விற்றுவிட்டோம். இந்த ஏலம் மூலம் அரசுக்கு சுமார் ரூ.116 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அடுத்தபடியாக புல்லட் ப்ரூஃப் வாகனங்கள் ஏலத்துக்கு விடப்படும். பின்னர் எருமை மாடுகளையும் ஏலத்தில் விட உள்ளோம்'' என்றார்.

ஏலத்துக்கு விடப்பட்ட கார்களில் 26 மெர்சிடிஸ் பென்ஸ், 8 புல்லட் ப்ரூஃப் பிஎம்டபிள்யூ, எஸ்யூவிக்கள் அடங்கும். அத்துடன் 40 டொயோட்டா கார்கள், எஸ்யூவி, லேண்ட் க்ரூசர் மற்றும் பல கார்கள் ஏலத்துக்கு விடப்பட உள்ளன.

தற்போது பாகிஸ்தானின் கடன் தொகை ரூ.30 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 87 சதவீதம் ஆகும்.  பிரதமராக பதவிஎர்ரதிளிருந்து இம்ரான் கான் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரும் பிரதமர் மாளிகையில் தங்காமல் ராணுவ தலைமை அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட 2 படுக்கையறை கொண்ட வீட்டில் தங்கி வருகிறார். இது தவிர அங்கு ஸ்மார்ட் ஃபோன், பால்கட்டி, வெண்ணெய், ஆடம்பர கார்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP