பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 39 பேர் பலி

பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயலில் சிக்கி 39 பேர் உயிாிழந்துள்ளனா். மேலும் 135 போ் காயமடைந்துள்ளனா் என்று தகவல்கள் தொிவிக்கின்றன.
 | 

பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 39 பேர் பலி

பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயலில் சிக்கி 39 பேர் உயிாிழந்துள்ளனா். மேலும் 135 போ் காயமடைந்துள்ளனா் என்று தகவல்கள் தொிவிக்கின்றன.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  மழையுடன் புழுதி புயலும் ஆங்காங்கே வீசி வருகிறது.  

இதில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப், பலுசிஸ்தான், கைபர் பக்துண்குவா ஆகிய பகுதிகளில் 80 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் இஸ்லாமாபாத்தில் 57மிமி-ம், ராவல்பிண்டியில் 24மிமி-ம், லாகூாில் 40மிமி-ம்,பெஷாவாில் 16மிமி மழை பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் வானிலை மையம் தொிவித்துள்ளது.

மேலும் மழை, வெள்ளம் மற்றும் புழுதி புயலில் சிக்கி இதுவரை 39 போ் உயிாிழந்துள்ளதாகவும், 135 போ் காயமடைந்துள்ளதாகவும் போிடா் மீட்பு குழுவினா் தொிவித்துள்ளனா்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP