கர்தார்பூர் திறப்பு விழா : இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம் - பாகிஸ்தானிற்கு இந்தியா எச்சரிக்கை !!

உலக புகழ்பெற்ற சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூர் வழித்தடம், வரும் நவம்பர் 9ஆம் தேதியன்று திறக்கப்படவுள்ளதை தொடர்ந்து, பல தலைவர்களும் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளது இந்தியா.
 | 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தேரா பாபா நானக் கோவிலையும், பாகிஸ்தானின் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைப்பது கர்தார்பூர் வழித்தடம். சீக்கியர்களின் புனித தலமாக கருதப்பட்டு வரும் இந்த வழித்தடத்தை வரும் நவம்பர் 9 ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.

இதற்கான திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடியுடன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ராத் பதால் மற்றும் ஹர்தீப் பூரி ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 150 பேரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து, நவம்பர் 11 ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நவம்பர் 12 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், கர்தார்பூர் ஷிரோமணி குருத்வாரா ப்ரபந்தக்கின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய  ராணுவத்தினரை பாகிஸ்தானிற்குள் நுழைய அனுமதி அளிக்குமாறு இந்தியா முன் வைத்திருந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், திறப்பு விழாவன்று அங்கு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும் இந்தியாவுடன் பகிர மறுத்துள்ளது.

இதனால், அதிருப்தியடைந்துள்ள மத்திய அரசு, இந்தியாவுக்கு எதிரான செயல்கள் ஈடுபட வேண்டாம் என்றும், பின்னர் மிக பெரிய அளவில் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றும் பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP