உடல்நிலை மோசமானதால் துபாய் சென்ற முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்

முன்னாள் பாகிஸ்தான் முதல்வர் பர்வேஸ் முஷாரப், அரிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென அவசர சிகிச்சைக்காக துபாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 | 

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கடந்த ஆண்டு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் அஃப்சால் சித்திக்கி, கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்தார். இந்த நோயால் அவரது நரம்பு கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

லண்டனில் சிகிச்சை பெற்று வந்த முஷாரப்பின் உடல்நிலை தற்போது மோசமானதாகவும், மேல் சிகிச்சைக்காக அவரை துபாய் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் மெஹ்ரீன் ஆடம் மாலிக் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை அவை சிகிச்சை பெறுவார் என்றும், சிகிச்சைக்குப்பின் பாகிஸ்தானுக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.

2007ல் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முஷாரப்புக்கு எதிராக 2014ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2016 மார்ச் மாதம், மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்ற அவர், இதுவரை பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP