Logo

இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்!!

இம்ரான் கானின் ஆட்சியில் இருந்து பாகிஸ்தானை விடுவிக்கும் நோக்கத்துடன் ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் அமைப்பின் உறுப்பினர்களும், எதிர்கட்சியினரும் நேற்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

இம்ரான் கான் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் பாகிஸ்தானில் பொருளாதார சரிவு நிலை ஏற்பட்டது, தில்லு முல்லு செய்து தான் அவர் ஆட்சியை பிடித்தார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வந்த ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான், இம்ரான் கானிற்கு எதிராக கடந்த மாதம் 27ஆம் தேதி பேரணி ஒன்றை தொடங்கினார்.

இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்!!

"ஆஸாதி" எனப்படும் இந்த பேரணிக்கு, எதிர்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தொடங்கிய இந்த பேரணி, சுக்குர், முல்தான், குஜ்ரன்வாலா ஆகிய பகுதிகளை கடந்து, நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இஸ்லாமாபாத் வந்தடைந்தது.

இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்!!

இந்த பேரணியில் கலந்து கொண்ட மக்கள், பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது ஆட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, அவரை ஆட்சியில் இருந்து விலகுமாறு கூறி அவர் மீதான தங்களின் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP