பாகிஸ்தானில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை நிறுத்தம்!

காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் வான் வழியில் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் புறப்பட்ட விமானங்கள் சொந்த ஊருக்குச் சென்றன.
 | 

பாகிஸ்தானில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை நிறுத்தம்!

காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக பாகிஸ்தானில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 12 போர் விமானங்களுடன், 1000 கிலோ எடை வெடிபொருட்களுடன் சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது. 

இதனால், பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீர் எல்லையில் நுழைய முயற்சி செய்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் விமானங்கள் நுழைவதை தடுக்கும் பொருட்டு இந்திய போர் விமானங்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று காலை எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எஃப் -16 விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. தொடர்ந்து, எல்லையில் பதற்றம் நிலவி வருவதால், காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் அமிர்தசரஸ் ஆகிய பகுதிகளில் விமான சேவை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சர்வதேச விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்நாட்டு, வெளிநாட்டு என ஒட்டுமொத்தமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் புறப்பட்ட விமானங்கள் சொந்த ஊருக்குச் திரும்பின.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP