பாகிஸ்தானுக்கு 48 அதிநவீன டிரோன்களை விற்கும் சீனா!

பாகிஸ்தானுக்கு நெருக்கமாக இருந்து வரும் சீனா, பெரும் ஒப்பந்தத்தின் மூலம் 48 அதிநவீன டிரோன்களை அந்நாட்டிற்கு விற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

பாகிஸ்தானுக்கு 48 அதிநவீன டிரோன்களை விற்கும் சீனா!

பாகிஸ்தானுக்கு நெருக்கமாக இருந்து வரும் சீனா, பெரும் ஒப்பந்தத்தின் மூலம் 48 அதிநவீன டிரோன்களை அந்நாட்டிற்கு விற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தின்படி, S-400 நவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்தை இந்தியா அந்நாட்டிடம் இருந்து பெற்றது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான அதேநேரம், பாகிஸ்தானுடன் - சீனா செய்துகொண்ட ஒரு ஒப்பந்தம் பற்றிய தகவல் வெளியானது. இதன்படி, 48 அதிநவீன ஆளில்லா டிரோன்களை, பாகிஸ்தானுக்கு விற்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. 

சீனாவின் செங்குடு விமான நிறுவனம், விங் லாங் II என்ற பெயரில் உருவாக்கியுள்ள டிரோனை பாகிஸ்தானுக்கு விற்கவுள்ளது. இதற்கான மதிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான கால அவகாசம் குறித்து எந்த தகவலும் இல்லை. 

48 விங் லாங் II டிரோன்களை விற்கும் இந்த ஒப்பந்தம் தான், சீனாவின் மிகப்பெரிய வெளிநாட்டு டிரோன் ஏற்றுமதி என கூறப்படுகிறது. இந்த டிரோன் மூலம், நவீன முறைகளை கையாண்டு உளவு பார்க்கவும், அதேநேரம், எதிரிகளை தாக்கவும் முடியுமாம். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP