நவாஷுக்கு பெயில் மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் முறையீடு

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் நவாஸ் ஷெரீப்புக்கு பெயில் மறுக்கப்பட்டதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
 | 

முன்னாள் பாகிஸ்தான் முதல்வர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2017ம் ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின், அந்நாட்டின் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அல் அஸீஸியா ஸ்டீல் மில்ஸ் வழக்கில், ஷெரிப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவ காரணங்களுக்காக தனக்கு பெயில் அளிக்க வேண்டும், என அவர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அவரது மனுவை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, தற்போது, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின் மீது தடை விதிக்குமாறு வழக்கு தொடுத்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP