அமைச்சர் பிடிக்காததால் 730 நாள் லீவ்: பாக். புதிய அமைச்சரவையில் சலச்சலப்பு

பாகிஸ்தானில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் மீது அதிருப்தியடைந்த அதிகாரி ஒருவர், 730 நாள் விடுமுறை கேட்டு கடிதம் அனுப்பிய சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
 | 

அமைச்சர் பிடிக்காததால் 730 நாள் லீவ்: பாக். புதிய அமைச்சரவையில் சலச்சலப்பு

பாகிஸ்தானில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் மீது அதிருப்தியடைந்த அதிகாரி ஒருவர், 730 நாள் விடுமுறை கேட்டு கடிதம் அனுப்பிய சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 

பாகிஸ்தானில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பேற்றது. மாற்றப்பட்ட அமைச்சரவையில் ஒவ்வொரு துறைக்கும் தகுந்த நியமனங்களும் நடந்து வருகின்றன. இதில், ரயில்வே துறையின் புதிய அமைச்சராக ஷேக் ரஷீத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், அங்குள்ள அந்தத் துறையின் தலைமை வர்த்தக மேலாளராக பணியாற்றும் முகமது அனீப் குல் என்பவர் 730 நாட்கள் தனக்கு விடுமுறை வேண்டும் என்று கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். விடுமுறைக்கு அவர் குறிப்பிட்ட காரணம் தான் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. ''ரயில்வே துறையில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஷேக் ரஷீத்துக்கு பணி தொடர்பாக எதுவும் தெரியவில்லை. மேலும், அரசு ஊழியர்களுடன் அவர் மரியாதை குறைவாக நடந்து கொள்கிறார். அவருடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியாது. எனவே, எனக்கு சம்பளத்துடன் 730 நாட்கள் விடுப்பு வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இவரது விடுப்பு விண்ணப்பம் புதிய அமைச்சரவையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வேகமாக இந்த கடிதம் பரவி வருகிறது. அதை பார்க்கும் பலரும் பாகிஸ்தான் ரயில்வேத்துறையில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். சிலர் அமைச்சரையும் அதிகாரிகளையும் விமர்சித்து வருகின்றனர். பலரும் அதிகாரியின் இந்த செயல் மோசமான முன்னுதாரணம் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP