மசூத் அசாரின் சகோதரர் உள்ளிட்ட 44 பேர் கைது; பாகிஸ்தான் அதிரடி!

பாகிஸ்தான் அரசு நடத்திய அதிரடி சோதனையில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் முஃப்தி ஆப்துர் ரஃப் உள்ளிட்ட 44 பேரை கைது செய்துள்ளனர்.
 | 

இந்தியாவில் தொடர் தாக்குதல் நடத்தி வந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முக்கிய புள்ளிகள் பலரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய காரணமாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் இந்தியா கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து, தீவிரவாத ஜெய்ஷ் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முஃப்தி ஆப்துர் ரஃப் உள்ளிட்ட 44 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். 

வரும் நாட்களில் மேலும் பலரை பாகிஸ்தான் அரசு கைது செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், தப்பிக்க முயற்சிக்கவில்லை, என்றும் கூறப்படுகிறது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு அனுப்பிய ஆவணங்களை வைத்து இந்த அதிரடி நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளதாக  தெரிகிறது. "எந்த நாட்டின் நெருக்கடியின் காரணமாகவும் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை" என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷெர்யார் கான் அப்ரிடி கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP