பாடகரை கட்டிப்பிடித்த இளம் பெண் - அதிரடியாக கைது செய்த போலீஸ்! 

சவுதியில் உருது மேடை பாடகரை நிகழ்ச்சியின்போது கட்டிப்பிடித்த இளம் பெண் கைது செய்யப்பட்டார்.
 | 

பாடகரை கட்டிப்பிடித்த இளம் பெண் - அதிரடியாக கைது செய்த போலீஸ்! 

சவுதியில் உருது மேடை பாடகரை நிகழ்ச்சியின்போது கட்டிப்பிடித்த இளம் பெண் கைது செய்யப்பட்டார். 

ஈரான் நாட்டைச் சேர்ந்த உருது பாடகர் மஜீத் அல் மோகன்டிஸின். இவர் சவுதி குடியுரிமை பெற்றவர்.  இந்த நிலையில் அவர் சவுதி அரேபியாவின் டைஃப் நகரத்தில் மேடை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், திடீரென ஓடிச்சென்று பாடகரை கட்டிப்பிடித்தார். 

இதைக் கண்டு அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்தப் பெண்ணை அவரிடம் இருந்து இழுத்து வெளியே போக வைத்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. பின்னர் அந்த அந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. பொது நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க கூடாது என்று நீண்டகாலமாக இருந்து வந்த கட்டுப்பாடு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் சீர்திருத்த நடவடிக்கையின்போது அகற்றப்பட்டது. இந்த சூழளில் இத்தகைய நிகழ்வு அங்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் சவுதி அரேபியாவில் பெண்கள் தங்களுக்கு தொடர்பில்லாத ஆண்களுடன் பொது வெளியில் ஒன்று கூடுவதற்கு அனுமதி இல்லை. 

கடந்த மாதம் பெண்கள் கார் இயக்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண்ணின் கார் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP