எங்கே போனார் துபாய் இளவரசி? - ஆட்சியாளர்களிடம் மனித உரிமை அமைப்பு கேள்வி

காணாமல் போன துபாய் இளவரசி குறித்த தகவலை வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு அரசை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
 | 

எங்கே போனார் துபாய் இளவரசி? - ஆட்சியாளர்களிடம் மனித உரிமை அமைப்பு கேள்வி

எங்கே போனார் துபாய் இளவரசி? - ஆட்சியாளர்களிடம் மனித உரிமை அமைப்பு கேள்விகட்டுப்பாடுகளால் நாட்டை விட்டு வெளியேறி, பின் காணாமல் போன துபாய் இளவரசி குறித்த தகவலை வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு அரசை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. 

ஐக்கிய அரபு எமிரக அரசர் ஷேக் மொஹமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகளும் நாட்டின் இளவரசியுமான ஷேய்கா லத்தீஃபா, தன்னுடைய குடும்பத்தினர் தன் மீது விதிக்கும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் அடக்குமுறைகளை வெறுத்து வெளிநாட்டுக்கு தப்பித்ததாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆனால், தப்பிச் சென்ற இளவரசி மீண்டும் நாடு திரும்பியதாக அரசருக்கு நெருக்கமான இடத்தில் இருந்து தகவல் கசியவிடப்பட்டது.

உண்மையில், துபாயில் இருந்து தப்பிக்க திட்டமிட்ட லத்தீஃபா, சொகுசு படகில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரை, இந்தியப் பெருங்கடல் எல்லைப் பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் தடுத்து நிறுத்தி மீண்டும் துபாய்க்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. துபாய் பாதுகாப்புப் படையினருடன் இளவரசி வந்ததை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர். அதன்பிறகு, இளவரசியை பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. 

எங்கே போனார் துபாய் இளவரசி? - ஆட்சியாளர்களிடம் மனித உரிமை அமைப்பு கேள்வி

இது குறித்து கேள்வி எழுப்பும்போது எல்லாம், சட்டரீதியான காரணங்களால், இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று துபாய் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது, லத்தீஃபா பிடிபட்டதாக மட்டும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. மேலும், பிரான்ஸ் நாட்டின் ரகசிய ஏஜெண்ட் ஒருவரும் ஃபின்லாந்து தற்காப்புக் கலை பயிற்றுநர் ஒருவரும் லத்தீஃபாவுக்கு உதவியதாகவும் சில செய்திகள் வெளியாகின. 

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கேள்வி

ஆனால், லத்தீஃபா குறித்த எந்த ஒரு விவரத்தையும் வெளியிட துபாய் அரசு மறுத்துவந்தது. இதனால், அவர் உயிருடன்தான் இருக்கிறாரா என்ற சந்தேகத்தையும் பலர் எழுப்பினர். ஆனாலும் கூட துபாய் அரசு அசைந்துகொடுக்கவில்லை. இளவரசி தொடர்பான தகவல்கள் அனைத்தும் மிகமிக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதனால், இளவரசியின் நிலை பற்றி உண்மை நிலையை துபாய் ஆட்சியாளர்கள் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு கூறுகையில், "தன் குடும்பத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்து செல்ல விரும்புவதாக லத்தீஃபா, தமது தோழிகளிடம் கூறியுள்ளார். அவர் காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆவதால், அவர் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.

எங்கே போனார் துபாய் இளவரசி? - ஆட்சியாளர்களிடம் மனித உரிமை அமைப்பு கேள்வி

அவர் எங்கு உள்ளார் என்பது கூட தெரியவில்லை என்றால், அவர் நிர்ப்பந்தத்தின்பேரில் காணாமல் போயிருப்பதாகவே ஆகும். 

கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று இந்தியாவின் கடற்கரையில் இருந்து 80 கிலோ மீட்டருக்குள் லத்தீஃபா இடைமறிக்கப்பட்டார் என்று பிரிட்டனில் இருந்து செயல்படும் ''டீடெயின்ட் இன் துபாய்' என்ற அமைப்பு கூறியுள்ளது." என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP