ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என்ன? அதன் விளைவுகள் என்ன?

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அந்த ஒப்பந்தம் எதற்காக போடப்பட்டது; அதன் பின்னணி என்ன; விலகுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பார்க்கலாம்....
 | 

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என்ன? அதன் விளைவுகள் என்ன?

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என்ன? அதன் விளைவுகள் என்ன?

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அந்த ஒப்பந்தம் எதற்காக போடப்பட்டது; அதன் பின்னணி என்ன; விலகுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பார்க்கலாம்....

ஒப்பந்தத்தில் உள்ளது என்ன?

அணு குண்டு தயாரிப்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஈரானை தடுக்க, பல பொருளாதார தடைகளை சர்வதேச நாடுகள் விதித்தன. எண்ணெய் ஏற்றுமதியை மையமாக கொண்ட ஈரான் பொருளாதாரம் பெரிதும் பாதித்தது. வேறு வழியே இல்லாமல், ஒரு சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட ஈரான் முன்வந்தது. அதன்படி, தடைகளை நீக்கவும், ஈரானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கவும் உறுதியளிக்கப்பட்டன. தனது பங்கிற்ரு ஈரானும், அணு ஆயுத தயாரிப்பை தடுக்கும் பல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர உறுதியளித்தது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறியதா?

ஒரு சில மாதங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிலையில் இருந்த ஈரான், இந்த ஒப்பந்தத்தால் அந்த நோக்கத்தை கைவிட்டது. இதனால் அந்நாடு அணு ஆயுதங்களை தயாரிக்க, குறைந்த பட்சம் 15 வருடங்களாவது ஆகும் என நிபுணர்கள் கூறினார்கள். பொருளாதார வளர்ச்சிக்காக தங்களது அணு ஆயுத கொள்கைகளை தளர்த்திக் கொண்டது ஈரான். பெரும்பாலும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறியதாகவே பார்க்கப்படுகிறது.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என்ன? அதன் விளைவுகள் என்ன?

சர்ச்சை என்ன?

இது அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டது. இந்நிலையில், புதிய அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், அந்த ஒப்பந்தம் மிக மோசமானது என விமர்சித்து வந்தார். ஒப்பந்தத்தின் படி ஈரான் நடப்பதாகவும், அணுஆயுத தயாரிப்பில் ஈரான் இறங்கவில்லை என்று பல தரப்பில் உறுதி செய்யப்பட்ட பின்னும், ஈரான் ஒப்பந்தத்தை மீறுவதாகவும், அதிலிருந்து விலக வேண்டும் என்றும் ஆதாரமில்லாமல் ட்ரம்ப் கூறி வந்தார்.

இது மிக மோசமான முடிவு என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உட்பட பல ஐரோப்பிய தலைவர்கள் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அதெயெல்லாம் பொருட்படுத்தாமல், ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தார். ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டு வருவாதாகவும் கூறினார். இதற்க்கு மற்ற நாடுகள் ஒத்துழைக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். 

முன்னாள் அதிபர் ஒபாமாவின் பல்வேறு முடிவுகளை ரத்து செய்து வரும் ட்ரம்ப், இதையும் ஒரு பழிவாங்கும் நோக்கிலேயே செய்வதாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். ட்ரம்ப்பும், இதுவரை எந்த உறுதியான காரணமோ, விளக்கமோ கொடுக்கவில்லை. அவரது சொந்த ஆலோசகர்கள் மற்றும் வெளியுறவுத்துறை செயலார்களே இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என்ன? அதன் விளைவுகள் என்ன?

அடுத்தது என்ன?

அமெரிக்கா விலகியது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளும் இதிலிருந்து விலக வேண்டும் என ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். அவரின் பேச்சை கேட்டு, இதில் மற்ற நாடுகள் பின்வாங்கினால், ஈரான் மீண்டும் அணு ஆயுத தயாரிப்பை நோக்கி நகரத் துவங்கிவிடும்.

தானே முன்னின்று புதிய ஒப்பந்தத்தில் ஈரானை கையெழுத்திட வைக்க வேண்டும், என ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஆனால், அப்படி ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ள வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா தன்னிச்சையாக விலகியுள்ளதால், இனி அந்நாட்டுடன் எந்த ஒப்பந்தத்திற்கும் ஈரான் வராது, என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்களை மீறி அமெரிக்கா எடுத்த இந்த முடிவை பொருட்படுத்தாமல், ஈரானுடனான வர்த்தகத்தை மற்ற ஒப்பந்த  நாடுகள் தொடர்ந்தால், அது ட்ரம்ப்புக்கு பெரும் தோல்வியாக அமையும் என்றும் கூறப்படுகிறது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP