சவுதி அரசை விமர்சித்த பத்திரிகையாளர் கொல்லப்பட்டாரா?

சவுதி அரசை தீவிரமாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என துருக்கி சந்தேகம் எழுப்பியுள்ளது
 | 

சவுதி அரசை விமர்சித்த பத்திரிகையாளர் கொல்லப்பட்டாரா?

சவுதி  அரேபி அரசை தீவிரமாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்,  அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என துருக்கி அரசு தற்போது சந்தேகம் எழுப்பியுள்ளது. 

இதற்கு சவுதி அரேபிய அரசு பதிலளிக்குமாறு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. 

சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால் கஷோகிஜி கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கி சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்து பல கட்டுரைகளை எழுதி வந்தவர். முன்னதாக அவர் சவுதி அரச குடும்பத்தின் ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். ஆனால் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சவுதியிலிருந்து வெளியேறிய அவர் அமெரிக்கா சென்று தங்கி, அங்கிருந்து சவுதி அரசை விமர்சித்து எழுதத் தொடங்கினார். இதுவே இவர் விவகாரத்தில் சவுதி மீது சந்தேகம் எழுப்ப வலுவானக் காரணமாக உள்ளது. 

பத்திரிகையாளர் மாயமான பின்னணியில் சவுதியா? 

ஜமால் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை அடுத்த வாரம் திருமணம் செய்யயிருந்த நிலையில் அவர் திடீரென காணாமல் போயுள்ளார். திருமணத்துக்கு தேவையான ஆவணம் ஒன்றை பெற, துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி தூதரகத்துக்கு ஜமால் கஷோகிஜி சென்றார். ஆனால், அவர் அங்கிருந்து திரும்ப வரவே இல்லை என்கிறது துருக்கி காவல்துறை.

இஸ்தான்புல் அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என சவுதி தரப்பு கூறியுள்ளது.  இருந்தபோதிலும் சவுதி அரசின் மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் துருக்கி  ஆகிய நாடுகள் அந்த நாட்டின் மீது முழு நம்பிக்கையில்லாத நிலையில் உள்ளதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். 

பிரிட்டன் வெளிநாட்டு விவகார அலுவலகம் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியுள்ளது. இதற்கு சவுதி அரசு மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்குப் பின், புலனாய்வுக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக சவுதி அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் முதலில், இஸ்தான்புல் தூதரக கட்டிடத்தில் விசாரணை நடத்தலாம் என துருக்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க ஊடகங்களும் இது திட்டமிட்ட சதி என குறிப்பிட்டு வருகின்றன. 

ஜமால் கஷோகிஜி, சவுதி தூதரக அலுவலகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம். இதன் பின்னணியில் சவுதி இருக்கலாம் என துருக்கி கூறி வருகிறது. ஆனால் இது தொடர்பான ஆதாரங்களை அளிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது 

இதனிடையே ஜமாலின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து உடனடியாக தகவல்களை வெளியிட வேண்டும் என்று இஸ்தான்புல்லில் பல இடங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் விவகாரத்தை தொடர்ந்து பத்திரிகையாளர்  ஜமால் மாயமான சம்பவம் துருக்கி மற்றும் சவுதியை மேலும் பிளவுபட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP