சவுதி இளவரசியை அட்டைப்படத்தில் கவுரவப்படுத்திய வோக் இதழ்!

பெண்களின் நலனுக்கான சவுதி அரேபிய அரசின் நடவடிக்கைகளை வோக் இதழ் தனது பதிப்பின் அட்டைப் படத்தில் கவுரவப்படுத்தியுளித்து.
 | 

சவுதி இளவரசியை அட்டைப்படத்தில் கவுரவப்படுத்திய வோக் இதழ்!

பெண்களின் நலனுக்கான சவுதி அரேபிய அரசின் நடவடிக்கைகளை வோக் இதழ் தனது பதிப்பின் அட்டைப் படத்தில் கவுரவப்படுத்தியுளித்து. 

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பெண்களின் நலனுக்காக குறிப்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன. 
 
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதே போல ஊடகங்களுக்கான விதிகளையும் தளர்த்தி வருகிறது. சமீபத்தில் திரையரங்கத்தையும் திறந்து அதில் ஆண் பெண் இருவரும் ஒன்றாக அமரக்கூடிய வகையில் அனுமதி அளித்தது. 

இந்த நிலையில் வோக் இதழ் சவுதி அரேபியாவில் தனது ஜூன் பதிவை வெளியிடுகிறது. இதனை பெண்கள் நலனில் அக்கறை காட்டி வரும் சவுதி அரசுக்கு அர்ப்பணிக்க முடிவுசெய்து உள்ளது.  சவுதி அரேபியா வோகின் முதல் பதிப்பாக இது முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த இதழின் அட்டைப் படத்தில்  நட்சத்திரமாக ஹேபா பின் அப்துல்லா அல் சவுத் இடம் பெற்றுள்ளார். இவர் மறைந்த மன்னர் அப்துல்லாவின் மகள் ஆவார். அப்துல்லா 2005ல் இருந்து சவுதி அரசராக இருந்தார் 2015ல் மரணம் அடைந்தார். 

இந்த அட்டைப் படத்தில்  சவுதி இளவரசி  1980களின் மெர்சிடஸ் 450 எஸ்.எல். சிவப்பு காரின் அருக்கையில் அமர்ந்திருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஹேபா பின் அப்துல்லா அல் சவுத் கூறும்போது, "நமது நாட்டில், மாற்றத்தை கண்டு பயப்படுகிற சில பழமைவாதிகள் இருக்கிறார்கள். அரசு புதிய திசையை நோக்கி பயணிக்கிறது. இந்த மாற்றங்களை நான் மிகவும் உற்சாகத்துடன் ஆதரிக்கிறேன். மற்ற மக்களின் சமுதாயங்களைப் பற்றி கருத்து தெரிவிப்பது மற்றும் உங்கள் சொந்த சமுதாயம் உயர்ந்ததாகக் கருதுவது எளிது. ஆனால் மேற்கத்திய உலகம் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட மற்றும் தனித்துவமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் பலம் மற்றும் பலவீனங்களைக் கொண்டிருக்கிறோம். ஆனால், தவிர்க்க முடியாதது, அது நமது கலாச்சாரம், அதை தவிர்ப்பதை  விட அதை புரிந்து கொள்ள முயற்சிப்பது தான் நல்லது. " எனக் கூறியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP