சிரியாவின் கிழக்கு கூட்டாவில் வெற்றி: ராணுவம்

கடந்த சில வாரங்களாக கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய ராணுவம் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய ராணுவம் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
 | 

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் வெற்றி: ராணுவம்

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் வெற்றி: ராணுவம்

கடந்த சில வாரங்களாக கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய ராணுவம் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த கடைசி பெரிய பகுதியான கூட்டாவை கைப்பற்ற சிரிய ராணுவம் கடும் வான்வழி தாக்குதல் நடத்தி வந்தது. இதில் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பக அமைப்புகள் எச்சரித்து வந்த நிலையில், சிரிய ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. குழந்தைகள்  உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 

தொடர் தாக்குதல்களை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியை விட்டு தினம் தினம் வெளியேறி வந்தனர். சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் சிரிய அரசுக்கு கண்டனம் எழுந்ததை தொடர்ந்து, போர் நிறுத்தம் செய்ய ஐநா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இதற்கிடையே இன்று, கிழக்கு கூட்டாவை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. 

கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களது  குடும்பத்தினர் என சுமார் 41,000 பேர் கூட்டாவை விட்டு வெளியேறி விட்டதாக தெரிகிறது. போருக்கு முன், சுமார் 4 லட்சம் மக்கள் கூட்டாவில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP