அமெரிக்காவால் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தல்: எச்சரிகிறது ஈரான்  

தங்களது நாட்டு கொள்கைகளுக்கு மற்றவர்களை நிர்பந்தப்படுத்தும் அமெரிக்காவின் போக்கு அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

அமெரிக்காவால் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தல்: எச்சரிகிறது ஈரான்  

தங்களது நாட்டு கொள்கைகளுக்கு மற்றவர்களை நிர்பந்தப்படுத்தும் அமெரிக்காவின் போக்கு அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஈரான் - ரஷ்ய அதிபர்கள் பேச்சு 

சீனாவின் கிங்டாவோ நகரில்  ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் உச்சி மாநாட்டு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி உள்ளிட்ட தலைவர்கள்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி, தங்கள் நாட்டுடனான ஒப்பந்தத்தை அமெரிக்கா தன்னிச்சையாக முறித்துக் கொண்டதாகவும், பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தங்கள் கொள்கைகளுக்கு ஒத்துப்போகுமாறு மற்ற நாடுகளை அமெரிக்கா மிரட்டுவதாகவும், இதன் மூலம் அனைத்து நாடுகளையும் அமெரிக்கா அச்சுறுத்துவதாகவும் ரூஹானி குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அணு ஆயூத தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ஈரான் அதிபருடன் ஆலோசனை நடத்தினார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கண்காணிப்பாளராக மட்டுமே உள்ள ஈரானுக்கு இந்த அமைப்பில் நிரந்தர இடம் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொள்ளும் என ரூஹானியிடம் புடின் உறுதி அளித்தார். 

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன. ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல், “ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று கூறிவந்தார் . அதன்படி ஐநா எச்சரிகையையும் மீறி தன்னிச்சையாக ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதனால், ஈரான் அரசு கொந்தளிப்பாக உள்ளது. உலக நாடுகள் பலவும் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP