முதன்முறையாக இஸ்ரேலில் அமெரிக்காவின் 'THAAD' ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்தி வரும் கூட்டு ராணுவ பயிற்சி முகாமின் ஒரு அங்கமாக, அமெரிக்காவின் அதிநவீன 'THAAD' ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பம் முதன்முறையாக இஸ்ரேல் நாட்டில் செயல்படுத்தப்பட்டது.
 | 

முதன்முறையாக இஸ்ரேலில் அமெரிக்காவின் 'THAAD' ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்தி வரும் கூட்டு ராணுவ பயிற்சி முகாமின் ஒரு அங்கமாக, அமெரிக்காவின் அதிநவீன 'THAAD' ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பம் இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது. 

அமெரிக்காவின் தாட் ஏவுகணை தடுப்பு கட்டமைப்பு, மிக அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டதாகும். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்டறிந்து, அதிவேகமாக சென்று அதை தனது ஏவுகணை மூலம் தாக்கி, செயலிழக்க செய்யும் வல்லமை கொண்டது THAAD. வெடிபொருட்கள் இல்லாமல், THAAD ஏவுகணை, தனது வேகத்தினால் மட்டுமே எதிரியின் ஏவுகணையை செயலிழக்க செய்யும்.

அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான இந்த தொழில்நுட்பம், இதுவரை, சவூதி, குவாம், தென் கொரியா ஆகிய நாடுகளில் மட்டுமே THAAD தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இஸ்ரேலில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவம் சேர்ந்து ராணுவ கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், THAAD தொழில்நுட்பத்தை இஸ்ரேல் அறிமுகப்படுத்தி, அது சோதனை செய்யப்பட்டது. இது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை என்றும், எந்த நாட்டையும் தாக்குவதற்காக அல்ல என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP