'அமெரிக்க தடைகள் ஈரானை ஒன்றும் செய்யாது'

ஈரான் மீது அடுத்தகட்ட பொருளாதார தடைகளை அமெரிக்க அரசு விதிக்க உள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒன்றும் புதிதல்ல என்றும், இதனால் ஈரானுக்கு பெரிய இழப்பு கிடையாது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
 | 

'அமெரிக்க தடைகள் ஈரானை ஒன்றும் செய்யாது'

ஈரான் மீது அடுத்தகட்ட பொருளாதார தடைகளை அமெரிக்க அரசு விதிக்க உள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒன்றும் புதிதல்ல என்றும், இதனால் ஈரானுக்கு பெரிய இழப்பு கிடையாது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீது அமெரிக்க அரசு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. அந்நாட்டுடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை, புதிய அதிபராக வந்த ட்ரம்ப் ரத்து செய்தார். ஈரான் மீது பொருளாதார தடைகள் தொடரும் எனவும் உறுதியளித்தார். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக நாளை முதல் புதிய தடைகள் அமலுக்கு வருகின்றன. இந்த தடைகள், அந்நாட்டின் எரிசக்தியை குறிவைக்த்து சுமத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய ஈரான் அணுசக்தி நிபுணர் சையத் ஹுசேன் மூஸாவியன், "ஈரான் மீது 40 ஆண்டுகளாக தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இது ஒன்றும் புதிதல்ல. சர்வதேச அளவில் பொருளாதார தடைகளை எதிர்கொள்வதில் ஈரான் தான் மிக அனுபவமிக்க நாடாகும். இந்த பகுதியில் உள்ள வேறு எந்த நாடுமே இதுபோன்ற பெரும் தடைகளை தொடர்ந்து சாமர்த்தியமாக எதிர்கொண்டது கிடையாது" என்று கூறினார். 

ஆனால், எண்ணெய் அல்லாத ஒரு அரசியல் பலத்தை ஈரான் உருவாக்கி கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல அமெரிக்க ஈரான் நிபுணரான கென்னத் கட்ஸ்மேன் இதுகுறித்து பேசியபோது, "இதுபோன்ற தடைகளால், அந்த பகுதியில் ஈரானின் பொருளாதார வளர்ச்சிக்கும், நடவடிக்கைகளிலும் எந்த மாற்றமும் ஏற்பட்டதாக இதுவரை தெரியவில்லை. எப்போதும்போல தான் ஈரான் செயல்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP